உடன்குடி பஜார் சந்திப்பில் தற்காலிக போக்குவரத்து நிழற்குடை அமைப்பு
தினத்தந்தி செய்தி எதிரொலியாக உடன்குடி பஜார் சந்திப்பில் தற்காலிக போக்குவரத்து நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
உடன்குடி:
உடன்குடி மெயின் பஜார் நான்கு சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். திறந்தவெளியில் சாலையில் வெயில், மழை காலங்களில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும்போது பல்வேறு சிரமங்களை அனுபவித்து வந்தனர்.
இதுகுறித்து கடந்த 17-ந்தேதி 'தினத்தந்தி'யில் போக்குவரத்து போலீசாரின் அவதிக்கு தீர்வு காணும் வகையில், நிழற்குடை அமைக்க வேண்டும் என்று செய்தி வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து தற்காலிகமாக போக்குவரத்து போலீசாருக்கு நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் நின்றவாறு போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் உடன்குடி மெயின் பஜாரில் போக்குவரத்து நெரிசலும் தவிர்க்கப்பட்டு வருகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வுகாண செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கு பொதுமக்களும், வியாபாரிகளும், வாகன ஓட்டிகளும், போக்குவரத்து போலீசாரும் நன்றி தெரிவித்துள்ளனர்.