தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து
கழுகுமலையில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
தூத்துக்குடி
கழுகுமலை:
கழுகுமலை- கோவில்பட்டி ரோடு காளவாசல் பஸ்நிறுத்தம் அருகே இக்னேஷியஸ் மனைவி செல்வம் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை உள்ளது. நேற்று காலை 9 மணிக்கு தீக்குச்சிகள் உள்ள குடோனில் தீக்குச்சி உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது. உடனடியாக கழுகுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். கழுகுமலை மற்றும் கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ மேலும் பரவாமல் தீயை அணைத்தனர். உதவி மாவட்ட அலுவலர் முத்து பாண்டியன் மற்றும் கழுகுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் மலையாண்டி, கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரராஜன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தீக்குச்சிகள் சேதமடைந்தன.
Related Tags :
Next Story