தேசிய வேளாண் சந்தையில்தொழில்நுட்பம் குறித்த பயிற்சி:விவசாயிகள் வலியுறுத்தல்
கம்பம் தேசிய வேளாண் சந்தையில் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் சந்தை (இ -நாம்) செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை தேசிய அளவிலான சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் இங்கு விளை பொருட்களின் தரம், அதன் விலை ஆகியவை தனி அலுவலர்களால் எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது.
வியாபாரிகளை தேடி அலையாமல் ஆன்லைன் மூலம் எவ்வாறு பணம் பெறுவது, அறுவடைக்குப்பின் செய்யவேண்டிய தொழில் நுட்பங்கள், தானியங்கள் சேமிக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள் பயன் பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பயிற்சி நடைபெறவில்லை. எனவே பயிற்சியில் பங்கேற்காத விவசாயிகளுக்கு மீண்டும் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.