கம்பத்தில், மகள் காதல் திருமணம் செய்ததால்விஷம் குடித்த பெண் சாவு


கம்பத்தில், மகள் காதல் திருமணம் செய்ததால்விஷம் குடித்த பெண் சாவு
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில்,மகள் காதல் திருமணம் செய்ததால் விஷம் குடித்த பெண் பரிதாபமாக இறந்தார்.

தேனி

காதல் திருமணம்

கம்பம் கோம்பைச் சாலை தெருவைச் சேர்ந்தவர் சேவகபாண்டி. இவரது மனைவி ஜோதிமணி (வயது 45). இந்த தம்பதிக்கு மோகனப்பிரியா (23), அபிநயா (22) என்ற மகள்களும், சந்தோஷ் (20) என்ற மகனும் உள்ளனர். சேவக பாண்டி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ஜோதிமணி தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல்லை சேர்ந்த வாலிபரை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டதாக மோகனப்பிரியா தனது தாய் ஜோதிமணியிடம் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த ஜோதிமணி இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மோகனப்பிரியாவை கண்டித்தார். ஆனால் மோகனப்பிரியா தாயின் பேச்சை கேட்காமல் இருந்ததாக தெரிகிறது.

விஷம் குடித்து தற்கொலை

இதனால் ஜோதிமணி மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 4-ந்தேதி அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அவரது மகன் சந்தோஷ் மருந்து பாட்டிலை பிடுங்கி எறிந்து அவரை சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் காதல் திருமணம் செய்ததால் விஷம் குடித்த தாய் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story