தூத்துக்குடி அருகே கோவிலில் திருட்டு


தூத்துக்குடி அருகே கோவிலில்  திருட்டு
x

தூத்துக்குடி அருகே கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.

தூத்துக்குடி

ஸ்பிக் நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் தங்கம்மாள்புரம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் மணி மகன் செந்தில்குமார் (வயது 37). இவரது குலதெய்வம் இசக்கியம்மன் கோவில் அந்தப் பகுதியில் உள்ளது. அந்தக் கோவிலில் வழக்கமாக தினமும் மாலை நேரத்தில் பூஜை நடத்தி வந்துள்ளனர். கடந்த மாதம் 23-ந் தேதி இரவு ஏழு மணிக்கு பூஜை முடித்து கோவிலின் கதவை சாத்திவிட்டு சென்றனர். மறுநாள் மாலை 6 மணிக்கு செந்தில்குமார் மற்றும் சிலரும் பூஜை செய்வதற்காக கோவிலின் காம்பவுண்டு கேட்டை திறந்து உள்ளே ெசன்றுள்ளனர். அப்போது கோவிலில் உள்ள உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு, அதிலிருந்த சுமார் ஆயிரம் ரூபாய் திருடப்பட்டு இருந்ததாம். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் உள்ள உண்டியல் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.Next Story