குதிரைமொழி சுந்தராட்சி அம்மன் கோவிலில் மகாசண்டி யாகம்


தினத்தந்தி 14 Aug 2023 12:15 AM IST (Updated: 14 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குதிரைமொழி சுந்தராட்சி அம்மன் கோவிலில் மகாசண்டி யாகம் நடந்தது.

தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள குதிரைமொழி சுந்தராட்சி அம்மன் கோவிலில் உலக மக்கள் அனைவரும் சுபிட்சமாக வாழ வேண்டியும், பருவ மழை பெய்ய வேண்டியும், 17-வது ஆண்டு மகா சண்டி யாகம் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலையில் கணபதி ஹோமத்துடன் யாகம் தொடங்கியது. தொடர்ந்து 64 பைரவர் பலி பூஜையும், நேற்று காலையில் மகா சண்டி யாகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து யாகத்தில் வைக்கப்பட்ட கும்ப கலசங்களுக்கு தீபாராதனையும், கும்ப கலசத்தில் வைக்கப்பட்ட புனித நீரால் அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.


Next Story