தூத்துக்குடி புத்தக திருவிழாவில், சனிக்கிழமை ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகர் பேசுகிறார்


தூத்துக்குடி புத்தக திருவிழாவில், சனிக்கிழமை  ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகர் பேசுகிறார்
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி புத்தக திருவிழாவில், சனிக்கிழமை ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகர் பேசுகிறார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 3-வது புத்தக திருவிழா கடந்த 22-ந் தேதி முதல் தூத்துக்குடி ஏ.வி.எம். திருமண மகாலில் நடந்து வருகிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு பதிப்பகத்தார் மூலம் புத்தகங்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. இதனை தினமும் பல்வேறு பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர். ஏராளமானவர்கள் புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். அதேபோன்று தினமும் பல்வேறு சிறப்பு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், எழுத்தாளரும், ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு "பேர் இசை கொற்கை" என்ற தலைப்பில் பேசுகிறார். இவர் தற்போது ஒடிசா மாநில முதல்வர் நவீன்பட்நாயக்கின் தலைமை ஆலோசகராக உள்ளார். சங்க கால இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு, அதில் முக்கிய ஆய்வுகள் மேற்கொண்டு உள்ளார். திராவிடவியல் ஆய்வாளரான இவர், சிந்து நதிக்கரை, வைகை நதிக்கரை நாகரிகங்களை ஒப்பிட்டு, அவற்றின் ஒப்புமைகளை ஆய்வுக்குள்ளாக்கி புத்தகம் எழுதி உள்ளார்.


Next Story