உடன்குடி பள்ளியில் மாணவர்களுக்கான வட்டார கலை திருவிழா
உடன்குடி பள்ளியில் மாணவர்களுக்கான வட்டார கலை திருவிழா நடந்தது.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி கீழ பஜார் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான கலைத்திருவிழா 2 நாட்கள் நடந்தது.
உடன்குடி வட்டார வள மையைத்திற்கு உட்பட்ட 7 அரசு நடுநிலை பள்ளிகள், ஒரு உயர்நிலை பள்ளி ஆகியவற்றில் நடந்த பல்வேறு போட்டிகளில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கான கலைத்திருவிழாவை வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயவதி ரத்னாவதி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பள்ளித் தலைமையாசிரியை அரும்பு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நுண்கலை, ஒவியம் இசை, நடனம், பேச்சு உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Related Tags :
Next Story