திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு முதுநிலை பாடப்பிரிவுகளான எம்.ஏ. ஆங்கிலம், பொருளியல், எம்.எஸ்சி. கணிதவியல், வேதியியல், விலங்கியல் போன்ற பாடப்பிரிவுகள் உள்ளன. முதுநிலை படிப்பிற்கு ஆண்கள், பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
எனவே முதுநிலை பாடப்பிரிவுகளில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் www.aditanarcollege.com என்ற கல்லூரி இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். மாணவ-மாணவிகள் சுயநிதி பிரிவுக்கு தனி விண்ணப்பமும், அரசு உதவிபெறும் பிரிவுக்கு தனி விண்ணப்பமும் சமர்ப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.