திருக்கானூர்பட்டியில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும்


திருக்கானூர்பட்டியில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும்
x

திருக்கானூர்பட்டியில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும்

தஞ்சாவூர்

திருக்கானூர்பட்டியில் பயணிகள் நிழற்குடை அமைத்து தரவேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருக்கானூர்பட்டி

திருக்கானூர்பட்டி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் சேவியர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோமதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருக்கானூர்பட்டியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். விபத்துகள் நடக்காமல் தடுக்க பள்ளி அருகே வேகத்தடை மற்றும் வேக கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்புகள் உடனடியாக அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய கவுன்சிலர் அருளானந்தசாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரோஜாமேரி, ஊராட்சி செயலாளர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பிள்ளையார்பட்டி

பிள்ளையார்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு மகளிர் திட்ட உதவி அலுவலர் சண்முகபாண்டியன், மாவட்ட கல்வி உதவி திட்ட அலுவலர் ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் சவுமியாஜனார்த்தனன், ஊராட்சி துணைத்தலைவர் ஜெயந்தி சதானந்தம், ஊராட்சி செயலாளர் சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரசு பள்ளியை மேம்படுத்தல், ஊராட்சி வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குருவாடிப்பட்டி

தஞ்சை அருகே குருவாடிப்பட்டி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் தாமரைச்செல்வி பன்னீர்செல்வம், துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜோதிவேல், தோட்டக்கலை துறையின் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கலைச்செல்வன், ஊராட்சி செயலாளர் ராஜீவ்காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நீலகிரி ஊராட்சி

தஞ்சை நீலகிரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மை பாஸ்கரன் தலைமையில் நடந்தது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வைத்தீஸ்வரன் முன்னிலை வகித்தார். இதில் துணைத்தலைவர் சிங்.சரவணன், ஊராட்சி செயலாளர் உலகநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story