திருக்கடையூரில், பாரம்பரிய நெல்ரகங்கள் கண்காட்சி


திருக்கடையூரில், பாரம்பரிய நெல்ரகங்கள் கண்காட்சி
x

திருக்கடையூரில், பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சியை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

திருக்கடையூரில், பாரம்பரிய நெல்ரகங்கள் கண்காட்சியை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

கண்காட்சி

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அரசு விதைப் பண்ணையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மரபு சார் பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை தாங்கினார், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், துணை இயக்குனர் மதியழகன், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மணிமாறன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் துளசிரேகா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் வரவேற்றார்.

பாரம்பரிய நெல் ரகங்கள்

இதில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். வேளாண் வல்லுநர்கள், மூத்த விவசாயிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டு் விவசாயிகளுக்கு தேவையான தொழில் நுட்பம், பாரம்பரிய நெல் ரகங்கள், வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல், பஞ்ச கவ்யம், பூச்சு விரட்டி தயாரிப்பு உள்ளிட்ட தலைப்புகளில் பேசினர்.

முன்னதாக கண்காட்சியை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் பாரம்பரிய நெல் ரகங்கள், வேளாண் உற்பத்திப் பொருட்கள், மரபு சார்ந்த முறையில் சாகுபடி செய்யப்பட்ட காய், கனி வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சிக்கு தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், திருக்கடையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமுர்த விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் அப்துல் மாலிக், அன்பழகன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாஸ்கரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செந்தில் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story