திருவையாறில், பராசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம்


திருவையாறில், பராசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

திருவையாறில், பராசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம்

தஞ்சாவூர்

திருவையாறு மேலவீதியில் பராசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 12-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் பராசக்தி மாரியம்மன் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு 4 முக்கிய ராஜவீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது தேரை 100-க்கு மேற்பட்ட பெண்கள் வடம்பிடித்து இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story