தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில்2பிளாட்பாரங்களை இணைக்கும் வகையில் நடைமேம்பாலம்: அமைச்சர் கீதாஜீவன் வலியுறுத்தல்


தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில்2பிளாட்பாரங்களை இணைக்கும் வகையில் நடைமேம்பாலம்: அமைச்சர் கீதாஜீவன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Jun 2023 12:15 AM IST (Updated: 1 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில் 2பிளாட்பாரங்களை இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் அமைச்சர் கீதாஜீவன் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில் 2 பிளாட்பாரங்களை இணைக்கும் வகையில் ரெயில்வே நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் அமைச்சர் கீதாஜீவன் வலியுறுத்தினார்.

ரெயில் நிலையம்

தூத்துக்குடி மேலூர் ரெயில்நிலையம் 2-ம் கேட் பகுதியில் இருந்துபுதிய பஸ்நிலையம் அருகே இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ரூ.12 கோடி செலவில் நடந்த, பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு ரெயில் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து உள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ரெயில்நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ரெயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நடைமேம்பாலம்

அப்போது, மேலூர் ரெயில் நிலையத்தில் கூடுதலாக நடைபாதை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆகையால் உழவர் சந்தை முன்பும், புதிய பஸ் நிலையம் முன்பும் படிக்கட்டுக்கள் அமைக்க வேண்டும். ரெயில் நிலையத்துக்கு தெற்கு பகுதியில் கூடுதலாக ஒரு இடத்தில் படிக்கட்டு அமைக்க வேண்டும். மேலும் 2 பிளாட்பாரங்களை இணைக்கும் வகையில் ரெயில்வே நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக ரெயில்வே அதிகாரிகள் உறுதியளித்து உள்ளனர்.

மேலும் ரெயில் நிலையத்தின் தெற்கு பகுதியில் கே.வி.கே.நகரில் உள்ள கிழமேல் சாலை மற்றும் தென்வடல் குறுக்குசாலைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

நிகழ்ச்சியில் ரெயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story