தூத்துக்குடி ரோச் பூங்காவில் ரூ.77¾ லட்சம் செலவில் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம்; கலெக்டர் செந்தில்ராஜ்


தூத்துக்குடி ரோச் பூங்காவில்  ரூ.77¾ லட்சம் செலவில்  குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம்; கலெக்டர் செந்தில்ராஜ்
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ரோச் பூங்காவில் ரூ.77¾ லட்சம் செலவில் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி ரோச் பூங்காவில் ரூ.77¾ லட்சம்செலவில் குரூஸ் பர்னாந்துக்கு மணி மண்டபம் அமைக்கப்பட உள்ளது என்றும், பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மணிமண்டபம்

தூத்துக்குடி நகர மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண 24 மைல் தூரமுள்ள தாமிரபரணி ஆற்றுப் படுகையில் கிணறுகள் தோண்டி வல்லநாட்டில் சுத்திக்கரிப்பு செய்து பெரிய குழாய்கள் மூலம் தூத்துக்குடி நகரத்திற்கு கொண்டு வந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார். இதன் காரணமாக இன்றளவும் தூத்துக்குடி "மக்களின் தந்தை" என்று போற்றப்படுகிறார். தூத்துக்குடி நகர மக்களின் பெரும் மதிப்பை பெற்ற குரூஸ் பர்னாந்தின் பிறந்த நாளான நவம்பர் 15-ந் தேதி அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

ரூ.77¾ லட்சம்

மேலும் தூத்துக்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தூத்துக்குடி மாநகரில் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தமிழக அரசு மணிமண்டபம் அமைப்பதற்காக ரூ.77 லட்சத்து 87 ஆயிரத்து 343 நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மணி மண்டபம் அமைப்பதற்காக ரோச் பூங்காவில் உள்ள காலி இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

தூத்துக்குடி "மக்களின் தந்தை" என போற்றப்படும் குரூஸ் பர்னாந்துக்கு தூத்துக்குடி மாநகரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழக முதல்-அமைச்சருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், மாவட்ட மக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story