தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிப்பு


தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 4:37 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

அனல்மின்நிலையம்

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. இந்த மின்உற்பத்தி எந்திரங்களில் அவ்வப்போது பழுது ஏற்பட்டு வருகிறது. கோடை காலத்தில் முழுவீச்சில் மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வந்தன. தற்போது பலத்த காற்று வீசி வருவதால் காற்றாலை மின்சாரம் அதிக அளவில் பெறப்பட்டு வருகிறது.

420 மெகாவாட்

இதனால் அனல்மின்நிலையத்தில் உள்ள 2-வது மின்சார உற்பத்தி எந்திரம் வருடாந்திர பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளது. இதில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று திடீரென 4-வது மின்சார உற்பத்தி எந்திரத்தில் உள்ள கொதிகலன் குழாயில் ஓட்டை விழுந்தது. உடனடியாக அந்த எந்திரம் நிறுத்தப்பட்டது. இதனால் அனல்மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பழுதடைந்த எந்திரத்தை சரி செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story