தூத்துக்குடி தூய பரிபேதுரு ஆலயத்தில் இரு தரப்பினர் இடையே மோதல்
தூத்துக்குடி தூய பரிபேதுரு ஆலயத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தில் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஒரு தரப்பை சார்ந்தவர்கள் சார்பில் தூத்துக்குடி தச்சர் தெருவில் உள்ள தூய பரிபேதுரு ஆலயத்தில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த கூட்டம் தொடர்பாக மற்றொரு தரப்பை சேர்ந்த சில உறுப்பினர்களுக்கு தகவல் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் எதிர் தரப்பினர் ஆலய வளாகத்துக்கு வந்தனர்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு நடந்தது. இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story