திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில்  மரக்கன்று நடும் விழா
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண். 48, 231 சுயநிதிப்பிரிவு மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம்.1 மற்றும் 2 அணிகள், வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சி மன்றம், மதர்சமூக சேவை நிறுவனம் ஆகியவை சார்பில் ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் விழாவை தொடங்கி வைத்து, இந்திய சுதந்திர அமுதசுரபி பெருவிழாவை நினைவு கூறும் வகையில் கல்லூரி வளாகத்தில் 75 மரக்கன்றுகளை நட்டார். நாட்டு நலப்பணித்திட்டம் சுயநிதிப்பிரிவு அணி எண்.231 திட்ட அலுவலர் ஜெயராமன் வரவேற்று பேசினார். மதர்சமூக சேவை நிறுவனத்தலைவர் ராஜ்கமல் கலந்து கொண்டு, பசுமை இந்தியா திட்டம் குறித்து மாணவர்களுக்கு விளக்கி பேசினார். விழா ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அணி எண்.48-ன் அதிகாரி கவிதா, இளையோர் செஞ்சிலுவை அணி எண்.1 திட்ட அதிகாரி மேதிலால் தினேஷ் ஆகியோர் செய்திருந்தனர். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அதிகாரி பார்வதிதேவி நன்றி கூறினார். கல்லூரி பேராசிரியர்களான அந்தோணி சகாய சித்ரா, ராஜ்பினோ, சிங்காரவேலு, சிரில்அருண், கரோலின் கண்மணி ஆனந்தி, திருச்செல்வன், ரூபன்சேசு அடைக்கலம், சுமதி, செந்தில்குமாரி, டயனா ஸ்வீட்லின், கருப்பசாமி, சிவந்தி, வானொலி தொழிற்நுட்ப கலைஞர் கண்ணன், ஆய்வக உதவியாளர் ஜெயந்தி மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள், இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story