திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்விழிப்புணர்வு கருத்தரங்கம்


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்விழிப்புணர்வு கருத்தரங்கம்
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்ெசந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவுகள் சொத்துரிமை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். உள்தரஉறுதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜிம்ரீவ்ஸ் ைலன்ட் நைட் வரவேற்றார். கருத்தரங்கில் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை வக்கீல் ஆயிரம் செல்வக்குமார் கலந்து கொண்டு, அறிவுசார் சொத்துரிமை சட்டம் மற்றும் போக்சோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்) பற்றி விளக்கம் அளித்து பேசினார். இந்த 2 சட்டங்கள் குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு அவர் பதில் அளித்தார். இன்ஸ்டிடியுசன் இன்னோவேஷன் கவுன்சில் பொறுப்பாளர் மற்றும் வணிக மேலாண்மை துறை பேராசிரியர் அ.தர்மபெருமாள் நன்றி கூறினார். இக்கருத்தரங்கில் நூலகர் முத்துக்கிருஷ்ணன், பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், கோகிலா, மூகாம்பிகை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story