திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்முதலாம் ஆண்டு சுயநிதிப்பிரிவு மாணவர்களுக்கு வழிகாட்டி பயிலரங்கம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதலாம் ஆண்டு சுயநிதிப்பிரிவு மாணவர்களுக்கு வழிகாட்டி பயிலரங்கம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண்.231 சுயநிதிப்பிரிவு மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங் மாணவர்களுக்கு பயிற்சி பயிலரங்கம் நடைபெற்றது. தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் கலந்து கொண்டு பயிலரங்கத்தை தொடங்கி வைத்து, நாட்டு நலப்பணித்திட்டத்தில் மாணவர்கள் தங்களை எவ்வாறு மக்களுக்கான சேவையில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்றார். நாட்டு நலப்பணித்திட்டம் சுயநிதிப்பிரிவு அணி எண்.231 திட்ட அலுவலர் ஜெயராமன் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அதிகாரியும், ஆங்கிலத்துறை பேராசிரியருமான மோதிலால் தினேஷ் கலந்து கொண்டு, நாட்டுக்கும் வீட்டுக்கும் எவ்வாறு மாணவர்கள் சேவைப்பணியில் அர்ப்பணித்து கொள்ள வேண்டும். இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் தங்களை சமூகப்பணியில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும், என்றார். மேலும், ரத்தானம், கண்தானம், உடல் உறுப்புகள் தானம் பற்றி மாணவர்கள் மத்தியில் அவர் விளக்கி பேசினார். நிகழ்ச்சியை முதலாமாண்டு இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட மாணவ ெசயலர் நட்டார் தொகுத்து வழங்கினார். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அதிகாரி பார்வதி தேவி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் சுயநிதிப்பிரிவு பேராசிரியர்களான சிங்காரவேலு, சுமதி, டயனா ஸ்வீட்லின், சகாயஜெய சுதா, பென்னட், ஆக்னஸ், அந்தோணி பிரைட்ராஜா, சுகாசினி, மகேஸ்வரி, ஆய்வக உதவியாளர் ஜெயந்தி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலுள்ள இளைஞர் செஞ்சிலுவை சங்கம், ரத்ததான சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய 'தொடக்கவிழா-2023' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி. மகேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இயற்பியல் துறை தலைவர் பாலு கலந்து கொண்டு, மாணவர்களுக்கு சமூக ேசவையும், அதன் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் பேசினார். இந்நிகழ்ச்சியை இளைஞர் சங்கத்தின் திட்ட அலுவலர் மோதிலால் ஏற்பாடு செய்திருந்தார். சங்க மாணவர் உறுப்பினர் ஜான்மேலான் நன்றி கூறினார்.