திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்தேசிய கருத்தரங்கம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் பொருளியல் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம், 'மாறி வருகின்ற இந்தியா' என்ற தலைப்பில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். இக்கருத்தரங்கில், காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி பேராசிரியர் வடிவேல் அர்ஜூனன், ஹரியானா மத்திய பல்கலைக்கழக பேராசிரியை லாங்காய் ஹிமானிங்கன், ஹிமாசலப்பிரதேச அரசு கல்லூரி பேராசிரியர் சந்தீப்குமார் தாக்கர், மும்பை எஸ்.என்.டீ.டி. கலை மற்றும் எஸ்.சி.பி. வணிகவியல் பெண்கள் கல்லூரி பேராசிரியர் கிஷோர் காதம் ஆகியோர் பேசினர். முன்னதாக பொருளியல் துறை தலைவர் மாலைசூடும் பெருமாள் வரவேற்று பேசினார். கணேசன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து பேசினார். கருத்தரங்க செயலர் அசோகன், கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். நிறைவு நிகழ்ச்சியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் சுந்தரவடிவேல் பேசினார். இக்கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்கள் 203 பேர் பங்கேற்றனர். இதில் 59 மாணவர்கள், ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். முதுகலை பொருளியல் மன்ற துணைத்தலைவர் கணேசன் நன்றி கூறினார்.
இதேபோன்று கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்கள்.43, 44-ன் சார்பில், 'பனை வளம் காப்போம்' என்ற தலைப்பில் மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்.44-ன் திட்ட அலுவலர் சத்தியலட்சுமி வரவேற்று பேசினார். தூத்துக்குடி மதர் சமூக சேவை நிறுவனர் டாக்டர் கென்னடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் பனைவிதைகளை நடவு செய்தனர். நாட்டநலப்பணித்திட்ட அணி எண்.43-ன் திட்ட அலுவலர் அபுல்கலாம் ஆஸாத் நன்றி கூறினார்.