திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் போட்டித் தேர்வுக்கு தயாராவது குறித்தகருத்தரங்கம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் போட்டித் தேர்வுக்கு தயாராவது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்ெசந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அகதர மதிப்பீட்டுக்குழு சார்பில் போட்டித் தேர்வுக்கு தயாராவது எப்படி? என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. அகதர மதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் அ.அந்தோணி சகாய சித்ரா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கி, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.
இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தனராக ஓய்வுபெற்ற சரக்கு மற்றும் சேவை வரித்துறை உதவி ஆணையர் பி.கலைச்செல்வன் கலந்து கொண்டு பேசுகையில், சரக்கு மற்றும் சேவைத்துறையில் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற தங்களை தயார்படுத்தி கொள்வது எப்படி?, போட்டி தேர்வை எதிர்கொள்வது எப்படி?, சரக்கு மற்றும் சேவை வரியின் நன்மைகள் பற்றியும், அதன் நுணுக்கங்கள், செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அகதர மதிப்பீட்டுக்குழு துணை ஒருங்கிணைப்பாளர் எம்.ஆர்.கார்த்திகேயன் நன்றி கூறினார். இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.