திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்கருத்தரங்கம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாகசக்கலை மன்றத்தின் சார்பாக, 'தற்காப்பு கலையும் மனவலிமையும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். சாகச கலை மன்ற இயக்குனர் சிவ இளங்கோ வரவேற்று பேசினார். ஆழ்வார்திருநகரியை சேர்ந்த பணிநிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் மற்றும் தற்காப்புகலை நிபுணர் சங்கரபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் தற்காப்பு கலையின் மூலமாக மாணவர்கள் தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை போன்ற பல நற்பண்புகளை வளர்த்து கொள்ள முடியும் என்பதை விளக்கி கூறினார். கருத்தரங்கில் பேராசிரியர்கள் மாலைசூடும் பெருமாள், சிவமுருகன், முருகேஸ்வரி, அசோகன், உமாஜெயந்தி, ஆன்றோ சோனியா, அமராவதி, சிவந்தி வானொலி மைய பொறுப்பாளர் கண்ணன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வரின் ஆலோசனைப்படி சாகசக்கலை மன்றத்தின் இயக்குனர் சிவ இளங்கோ மற்றும் உறுப்பினர்கள் மருதையா பாண்டியன், மோதிலால் தினேஷ், திலீப் குமார், பிரியதர்ஷினி ஆகியோர் செய்து இருந்தனர்.