திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கிராம உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கிராம உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு நடந்தது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தாலுகா வாரியாக நேற்று கிராம உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு நடந்தது. இதையடுத்து திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள 10 காலியிட பணிக்கு மொத்தம் 743 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடந்தது. இதில் 572 பேர் கலந்து கொண்டு எழுத்து தேர்வு எழுதினர். இந்த எழுத்து தேர்வில் இஸ்ரோ நில எடுப்பு உதவி கலெக்டர் ஜெயா மேற்பார்வையில், தாசில்தார்கள் சுவாமிநாதன், மலர்தேவன், வதனாள், சிவகாமசுந்தரி, துணை தாசில்தார்கள் பாலசுந்தரம், சங்கரநாராயணன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story