திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்


திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்
x

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி போதைப்பொருள் எதிர்ப்பு சங்கம் சார்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கல்லூரி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு போதைப்பொருள் எதிர்ப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஆனந்திபானு வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை வகித்து, போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் திருச்செந்தூர் மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மேரி, சந்தனமாரி ஆகியோர் கலந்து கொண்டு, போதைப்பழக்கம் மற்றும் மறுவாழ்வு என்ற தலைப்பில் போதைப்பொருட்களால் இளைய சமுதாயம் எவ்வாறு பாதிப்படைகிறது? அதிலிருந்து மீளும் வழிமுறைகள், போதைப்பொருள் பயன்படுத்துவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர். கூட்ட ஏற்பாடுகளை போதைப்பொருள் எதிர்ப்பு சங்க உதவி பேராசிரியைகள் ஜெ.ஆனந்திபானு, அம்பிகா ஆகியோர் ெசய்திருந்தனர்.


Next Story