திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை மன்ற கூட்டம்
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை மன்ற கூட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை மன்றக்கூட்டம் நடந்தது. நிதித்துறையில் வேலைவாய்ப்புகள் என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் மன்ற மாணவர் செயலர் டனிமோனிஸ் வரவேற்று பேசினார். கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். துறை தலைவர் கோ.கமலச்செல்வி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நாசரேத் மர்காஷியஸ் கல்லூரி பொருளியல் துறை உதவி பேராசிரியர் வி.ஆரோக்கிய அமுதன் கலந்து கொண்டு, நிதித்துறையில் வேலை வாய்ப்புகள் என்ற தலைப்பில் பேசினார். அப்போது, நிதித்துறையில் வேலைவாய்ப்பு, அதற்கான தகுதிகள் மற்றும் கணினி தகுதிகள், போட்டி தேர்வுகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கி கூறினார். 3-ம் ஆண்டு மாணவி ஜேஸ்மின் ரூபிகா நன்றி கூறினார். 2-ம் ஆம்டு மாமவி ஜெய்ஸ்ரீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறை பேராசிரியை தா.ஷீலா ஜெபஸ்டா மற்றும் பேராசிரியைகள் செய்திருந்தனர்.