திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்வணிகவியல் துறை மன்றக் கூட்டம்


திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்வணிகவியல் துறை மன்றக் கூட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2023 12:15 AM IST (Updated: 17 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை மன்றக் கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பாக மன்றக் கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். வணிகவியல் துறை 3-ம் ஆண்டு மாணவி ஜெயசுபா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக நாசரேத் ஜெ.ஜெ.நிறுவனத்தின் தளவாட சேவைகள் தொடர்பான ஆலோசகர், பயிற்சியாளர் மற்றும் உரிமையாளரான பேரின்பராஜ் 'தளவாட வேலை தொடர்பான விழிப்புணர்வு' என்ற தலைப்பில் பேசினார். அப்போது, பொருட்களை எவ்வாறு பண்டக சாலையில் சேகரிப்பது, சரக்குகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கான செயல்பாடுகள் மற்றும் பொருட்களை எவ்வாறு கையாண்டு விநியோகிப்பது என்பது குறித்து விளக்கினார். பின்னர் 3-ம் ஆண்டு மாணவி ராஜதேவி நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை தலைவர்கள் தமிழ்செல்வி, கமலச்செல்வி, வணிகவியல் மன்றத்தின் பொறுப்பாசிரியர்கள் மாரியம்மாள், சந்திரா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story