திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்குடல்புழு நீக்க வார விழா


திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்குடல்புழு நீக்க வார விழா
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் குடல்புழு நீக்க வார விழா நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் நாட்டு நல பணித்திட்ட அணிகள் 49, 50, தூத்துக்குடி, துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம் மற்றும் பிச்சிவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து குடல் புழு நீக்க வார விழாவை நடத்தின. விழாவுக்கு கல்லூரி முதல்வர் பொ. ஜெயந்தி வழிகாட்டுதலின்படி, த. ரேணுகா (முதல்வர் பொறுப்பு) தலைமை தாங்கினார். இதில் கல்லூரி விலங்கியல் துறை தலைவர் த. குமுதா கலந்து கொண்டு குடல் புழு என்பது என்ன? அதன் வகைகள் பற்றியும், குடல் புழு ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்தும், அவற்றின் நீக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாணவியருக்கு விளக்கி கூறினார். பின்னர் மாணவிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகளை அவர் வழங்கினார். ஏற்பாடுகளை நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள் மா. ஜான்சி ராணி, ரெ. சாந்தா ஆகியோர் செய்திருந்தனர்


Next Story