திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் சர்வதேச கடலோர தூய்மைப்படுத்துதல் தினம்


திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்  சர்வதேச கடலோர தூய்மைப்படுத்துதல் தினம்
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் சர்வதேச கடலோர தூய்மைப்படுத்துதல் தினம் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டம் அணிகள் 49 மற்றும் 50 சார்பில் சர்வதேச கடலோர தூய்மைப்படுத்துதல் தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். நாட்டு நல பணித்திட்ட அலுவலர் சாந்தா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக, கல்லூரி இணை பேராசிரியரும் விலங்கியல் துறை தலைவருமான குமுதா கலந்து கொண்டு "கடற்கரை மேலாண்மை" என்ற தலைப்பில் கடல் மாசுபாட்டினால் ஏற்படும் உயிரினங்களின் பாதிப்புகள், கடல் வாழ் உயிரினங்களை காப்பது குறித்து பேசினார். நிகழ்ச்சிகளை மாணவிகள் சித்திரை வடிவு, பால அபிராமி ஆகியோர் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில், கல்லூரி நாட்டு நல பணித்திட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவி ஹிருபாதேவி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டிளை கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் ஜான்சி ராணி, சாந்தா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story