திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்தேசிய வாக்காளர் தின விழா
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் நாட்டுநல பணித்திட்ட அணிகள் எண்.49 மற்றும் எண்.50 ஆகியவற்றின் சார்பில் தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டது. தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், திருச்செந்தூர் தேர்தல் கல்வி குழு சார்பாக வாக்காளர் விழிப்புணர்வு குறித்து ஓவிய போட்டி, பாட்டு போட்டி நடந்தது. ஓவிய போட்டியில் மாணவி அகிலா முதல் இடத்தையும், பத்மப்பிரியா 2-ம் இடத்தையும், இனியா 3-ம் இடத்தையும் பெற்றனர். பாட்டு போட்டியில் மாணவிகள் மரிய எஸ்லின், பாலா அபிராமி, கிருபாதேவி, பெல்சியா, ஜெகதீஸ்வரி ஆகியோர் தேர்வு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் ஜெயந்தி பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். மேலும், திருச்செந்தூர் தேர்தல் கல்வி குழு சார்பில் மாணவிகளுக்கு தலா ரூ.300 ஊக்க தொகையும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, தேர்தலின் மாண்பை வலியுறுத்தும் வண்ணம், மதம், இனம், ஜாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் வாக்களிப்போம் என மாணவிகளும், பேராசிரியர்களும் முதல்வர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஜான்சி ராணி, சாந்தா ஆகியோர் செய்திருந்தனர்.