திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவிகளுக்கு இயற்பியல் செய்முறை மேம்பாட்டு பயிற்சி


திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்  பள்ளி மாணவிகளுக்கு இயற்பியல் செய்முறை மேம்பாட்டு பயிற்சி
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவிகளுக்கு இயற்பியல் செய்முறை மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் பிளஸ்-2 படிக்கும் மாணவிகளுக்கு இயற்பியலை எளிதான முறையில் ஆர்வமுடன் கற்கும் விதமாக 2 நாட்கள் செய்முறை மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி வகுப்பில் ஆறுமுகநேரி, காயல்பட்டினத்திலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 137 பேர் கலந்து ெகாண்டனர். பிளஸ்-2 வகுப்பு செய்முறை பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து ஆய்வுகளையும் சிறந்த முறையில் தெளிவாக செய்யும் வகையில் இளங்கலை 3-ம் ஆண்டு மாணவிகளால் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவுக்கு கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். இயற்பியல் துறை தலைவர் ஜோ.ஜாக்குலின் அமலியா வரவேற்று பேசினார். இயற்பியல் துறை உதவி பேராசிரியர்கள் ரா.அபூர்வக்கனி, சே.உஷா ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியைகள் மற்றும் மாணவியர்கள் செய்திருந்தனர்.


Next Story