திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு பயிற்சி பட்டறை


திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்  மாணவிகளுக்கு பயிற்சி பட்டறை
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு பயிற்சி பட்டறை நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் தேசிய மின்நூலக அமைப்பின் சார்பில், "ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடும் நெறிமுறைகள் மற்றும் வெளியிடும் தளங்கள்" என்ற தலைப்பில் மாணவிகளுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நூலகர் உண்ணாமலை வரவேற்று பேசினார். கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி நூலகர் ஜெ.ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அனைத்து முதுகலை மாணவிகளும் கலந்துகொண்டனர். முதுகலை ஆங்கிலத்துறை மாணவிகள் எல்.எலிசபெத் பெர்சியால், ஜெ.ஹரிவர்ஷினி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பொருளியல்துறை தலைவர் மற்றும் பேராசிரியை எம்.சண்முகவல்லி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேசிய மின்நூலக அமைப்பின் உறுப்பினர்களான பொருளியல் துறை பேராசிரியை எம்.சண்முகவல்லி, நூலகர் உண்ணாமலை, வணிக நிர்வாகிவியல் பேராசிரியை தெய்வ வீரலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story