திருச்செந்தூர்-கோவில்பட்டியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூர்-கோவில்பட்டியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
தமிழகத்தில் பொறியியல் கல்வி மற்றும் அனைத்து கல்வியிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், தமிழ் மொழிக்கு முடிவுரை எழுத துடிக்கும் தி.மு.க. அரசை கண்டித்தும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார். நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் 500- க்கும் மேற்பட்ட பா.ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமை தாங்கினார். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story