திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் முன்னாள் மாணவியர் சங்க கூட்டம்


திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் முன்னாள் மாணவியர் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 10:32 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் முன்னாள் மாணவியர் சங்க கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் 6-வது முன்னாள் மாணவியர் சங்க கூட்டம் நடந்தது. முன்னாள் மாணவியர் சங்க ஒருங்கிணைப்பாளரும், இணை பேராசிரியருமான சுமதி வரவேற்று பேசினார். கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் கலைக்குருச்செல்வி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், மாணவிகள் அனைவரும் ஒரு குறிக்கோளுடன் படிக்க வேண்டும். படிப்பை முடித்தவுடன் வேலையில் சேர வேண்டும். செவிலியர் துறையிலும், மற்ற துறையிலும் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன' என கூறினார். தொடர்ந்து துணை முதல்வர் பெண்ணரசி, முன்னாள் மனைவி கவுரிக்கு நினைவு பரிசு வழங்கினார். 4-ம் ஆண்டு மாணவிகள் பொன்சினேகா, சிங்கப்பிரியா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். இணை பேராசிரியை சங்கீதா நன்றி கூறினார்.


Next Story