திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்


திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் தூய்மை வார விழாவின் கீழ் திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. இதன் நிறைவு நாளில் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடந்தது. முகாமுக்கு, திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன அலுவலர் செண்பகவள்ளி, வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் கந்தமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் நாகர்கோவில் பெஜான்சிங் கண் ஆஸ்பத்திரி டாக்டர் ரெபிஸ்லின் தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் சம்பந்தமான நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். இதில், இலவசமாக கண்புரை அறுவை சிகிச்சை, சலுகை விலையில் கண் கண்ணாடி வழங்குவதாகவும் மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இலவசமாக லேசர் சோதனை செய்யப்பட்டது.

இந்த முகாமில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என 500 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


Next Story