திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவில் பக்தர்கள் உள்பிரகாரத்தில் தங்கி விரதம் இருக்க அனுமதி இல்லை


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவில்  பக்தர்கள் உள்பிரகாரத்தில் தங்கி விரதம் இருக்க அனுமதி இல்லை
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவில் பக்தர்கள் உள்பிரகாரத்தில் தங்கி விரதம் இருக்க அனுமதி இல்லை என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவில் கோவில் உள் பிரகாரத்தில் தங்கி விரதம் இருக்க அனுமதி இல்லை என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

கந்தசஷ்டி திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகின்ற 25-ந் தேதி தொடங்குகிறது. சூரசம்ஹார நிகழ்ச்சி 30-ந் தேதியும், 31-ம் தேதி திருக்கல்யாணமும் நடக்கிறது.

இந்நிலையில் கோவிலில் பக்தர்களுக்காக நடைபெற்று வரும் அடிப்படை வசதிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

தற்காலிக கொட்டகைகள்

கந்தசஷ்டி திருவிழாவில் இந்த ஆண்டு கோவில் உள் பிரகாரத்தில் தங்கி விரதம் இருக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆனால் கந்த சஷ்டி விழாவில் விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் வளாகத்தில் 12 இடங்களில் தற்காலிக தங்கும் கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கோவில் வளாகத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 350 கழிப்பறைகளுடன், கூடுதலாக 100 தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்பட உள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக 2 ஆயிரத்து 729 போலீசார் மற்றும் 300 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர்.

சிறப்பு பஸ்கள்

கோவில் வளாகத்தில் 4 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் 3 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்படும். திருவிழா காலங்களில்

குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தினமும் 5 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் இருந்து 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் கூடுதலாக ரெயில்கள் இயக்க ரெயில்வே நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கோவில் வளாகத்தில் 80 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 50 கேமிராக்கள் கூடுதலாக பொறுத்தப்படும். அதேபோல் 3 ட்ரோன் கேமிராக்கள் மூலம் கடற்கரை முழுவதும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

ஆய்வின் போது, கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், மாவட்ட சுகாதாரபணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன், திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், நகராட்சி ஆணையாளர் வேலவன் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story