திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இந்து முன்னணியினர் பிரார்த்தனை


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில்  இந்து முன்னணியினர் பிரார்த்தனை
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இந்து முன்னணியினர் பிரார்த்தனை நடத்தினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் அயோத்தி ராமர் கோவிலில் விரைவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெறவும், அங்கு பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் டிரஸ்ட் உறுப்பினர்களின் நலனுக்காகவும் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை, அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில பொது செயலாளர் அரசு ராஜா, மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன், தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் கசமுத்து, திருச்செந்தூர் நகர பொது செயலாளர் முத்துராஜ், ஒன்றிய செயலாளர் ராஜூ நகர தலைவர்கள் மாயாண்டி, பொன்ராஜ், நகர துணை தலைவர் மணி, நகர செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story