திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாகப் பணிகள் தொடக்கவிழா


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாகப் பணிகள் தொடக்கவிழா
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாகப் பணிகள் தொடக்கவிழா நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடியிலான பெருந்திட்ட வளாகப் பணிகளை தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். கோவிலில் நடந்த விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வாமசுந்தரி இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ரூ.300 கோடி செலவில் பக்தர்கள் வசதிக்காக காத்திருக்கும் அறை, முடிகாணிக்கை செலுத்துமிடம், வாகன நிறுத்துமிடம், தங்கும் விடுதி, அன்னதானக் கூடம், வணிக வளாகம், திருமண மண்டபம் உள்ளிட்ட பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற உள்ளது. அதேபோல் கோவில் மகா கும்பாபிஷேக விழா பணிகளும் இத்திட்டத்துடன் ஒருங்கிணைந்து நடைபெற உள்ளது. இத்திட்டத்திற்கான தொடக்க விழா, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

இதையடுத்து திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதல்-அமைச்சருக்கு நன்றி கூறினார். அப்போது மேடையில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரா.அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராம்தாஸ், கணேசன், செந்தில்முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், தி.மு.க. மாணவரணி மாநில துணை அமைப்பாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் ஏ.பி.ரமேஷ், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது, ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பிரமசக்தி, மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து துணை தலைவர் கல்யாண சுந்தரம், மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்து தலைவர் மகாராஜா, ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் கமால்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முருகன் வேடம் அணிந்து கொண்டு கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story