திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுனர் குடும்பத்துடன் சாமி தரிசனம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுனர் குடும்பத்துடன் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுனர் குடும்பத்துடன் சாமி தரிசனம்

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் நேற்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கூறுகையில், இந்தியா-இலங்கை நட்புறவு வலுப்பெற்று உள்ளதாக தெரிவித்தார்.

சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று இரவு இலங்கை கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தனது குடும்பத்துடன் வந்தார். அவர் மூலவர் சண்முகர் மற்றும் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நட்புறவு

இலங்கையில் கொரோனா காலகட்டத்துக்கு பின்னர் பெரிய அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. இலங்கையில் அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்ற பிறகு வளமை திரும்பி உள்ளது. இலங்கை வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

இந்தியா-இலங்கை உறவு நெருக்கமானது. இங்குள்ள புத்த போதனைகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, அதை மக்கள் பின்பற்றுகின்றனர். இது ஒரு கலாசார அடிப்படை உறவு. இலங்கையில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டபோது இந்திய அரசு மற்றும் தமிழக அரசு நிறைய உதவிகள் செய்துள்ளன. இதனால் நட்புறவு மேலும் வலுப்பெற்றுள்ளது.

ஆன்மிக பயணம்

இலங்கையில் உள்ள தமிழர்கள், தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் திருப்பதிக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சிங்களர்கள் புத்தகயா, வாரணாசி போன்ற இடங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்கள். இலங்கை மக்களின் மத வழிபாடு இந்திய பூர்வீகத்தை சார்ந்து இருப்பதால் அனைத்து மத வழிபாடுகளுக்கும் இங்கு வந்து செல்கின்றனர்.

முன்பு இந்தியா-இலங்கை வணிகரீதியான உறவு நெருக்கமாக இருந்தது. தற்போது இணையதளம், சமூக வலைதளம் மூலமாக ஆன்லைன் வர்த்தகம் நடப்பதால் பழைய மாதிரி தொழில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், மக்கள் அதிகளவு அதை பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story