தூத்துக்குடி மைய நூலகத்தில்நூலகர் தின விழா


தூத்துக்குடி மைய நூலகத்தில்நூலகர் தின விழா
x
தினத்தந்தி 14 Aug 2023 12:15 AM IST (Updated: 14 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மைய நூலகத்தில் நூலகர் தின விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் நூலகர் தின விழா நடந்தது. விழாவை முன்னிட்டு தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் நூலகத்துக்கு வந்து, அங்கு நடைபெற்ற ஓவியப் போட்டியில் கலந்து கொண்டனர். மேலும் வாசிக்கும் திறனை வளர்க்கும் விதமாக மாணவிகளுக்கு நூல்கள் வழங்கப்பட்டு வாசிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவிகள் அனைவரும் நூலகத்தில் உள்ள பிரிவுகள் அனைத்தையும் பார்வையிட்டனர். ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிகள் வழங்கப்பட்டன.

விழாவில் ஓய்வுபெற்ற கருவூலம் மற்றும் கணக்குத்துறை கூடுதல் இயக்குநர் து.கணேசன், ஓய்வுபெற்ற கருவூலம் மற்றும் கணக்குத்துறை கண்காணிப்பாளர் எம்.எஸ்.செய்யது முகம்மது ஷெரீப், இரண்டாம் நிலை நூலகர்கள் கொ.சங்கரன், ஜெ.லதா, மு.அருணாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ரூ.1000 செலுத்தி நூலகப் புரவலராக செல்வராஜ், நாராயணன் ஆகியோர் இணைந்தனர். 50 மாணவிகள் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர். மாலையில் நூலகர்களுக்கான வினாடி வினா, இசை நாற்காலி, கேரம் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை மாவட்ட மைய நூலகர் மா.ராம்சங்கர் செய்து இருந்தார்.


Next Story