தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மீன், இறால் உறுகாய் தயாரிப்பு பயிற்சி


தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில்  மீன், இறால் உறுகாய் தயாரிப்பு பயிற்சி
x
தினத்தந்தி 25 Nov 2022 12:15 AM IST (Updated: 25 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மீன், இறால் உறுகாய் தயாரிப்பு பயிற்சி நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மீன் மற்றும் இறால் ஊறுகாய் தயாரிப்பு மற்றும் விற்பனையில் தொழில் முனைதல் என்ற தலைப்பில் ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது. பயிற்சியில் தேனி மாவட்டம் போடியை சேர்ந்த சமூக முன்னேற்ற சங்கத்தைச் சார்ந்த 20 உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியில் மீன் மற்றும் இறால் ஊறுகாய் தயாரிப்பு, பொதிகம் மற்றும் விற்பனை வாய்ப்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் ப.அகிலன் கலந்து கொண்டு பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது, திறன் மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்தும், மீன் மற்றும் மீன் சார்ந்த உணவுப்பொருட்களின் பங்கு குறித்தும் விளக்கினார். இந்த பயிற்சியை மீன்பதன தொழில்நுட்பத் துறையின் உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர் பா.கணேசன் ஒருங்கிணைத்து நடத்தினார்.


Next Story