தூத்துக்குடி கோட்ட தபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு மேளா


தூத்துக்குடி கோட்ட தபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு மேளா
x
தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி கோட்ட தபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு மேளா வெள்ளிக்கிழமை நடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி கோட்டதபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்க நாளைமறுநாள்(வெள்ளிக்கிழமை) சிறப்பு மேளா நடக்கிறது.

இதுகுறித்து தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் மு.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு மேளா

தபால் அலுவலகங்களில் உள்ள சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த பயன்களை பொதுமக்கள் பெறும் வகையில் தூத்துக்குடி தபால் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் வருகிற 24-ந்தேதி வரை சிறப்பு மேளா நடக்கிறது.

தபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கிய உடன் ஏ.டி.எம் கார்டு, எஸ்.எம்.எஸ் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் வசதிகள் உடனடியாக வழங்கப்படும்.

பணபரிவர்த்தனை

தபால் சேமிப்பு கணக்கில் இருந்து பிற வங்கிகளுக்கும், பிற வங்கியில் இருந்து தபால் சேமிப்பு கணக்குக்கும் பண பரிவர்த்தனை செய்ய முடியும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுக வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story