தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் பண்ணை சார்ந்த மீன் தீவனம் தயாரித்தல் பயிற்சி
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் பண்ணை சார்ந்த மீன் தீவனம் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பண்ணை சார்ந்த மீன் தீவனம் தயாரித்தல் குறித்த ஒருநாள் உள் வளாக பயிற்சி வருகிற 31-ந் தேதி நடக்கிறது. இந்த பயிற்சியில் மீனுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், மீன் தீவனம் தயாரிக்க தேவைான தாவர மற்றும் விலங்கின மூலப்பொருட்கள் தேர்ந்தெடுத்தல், தேர்ந்தெடுத்த மூலப்பொருட்களை நன்றாக அரைத்தல், மீன் தீவனம் பிழிந்து எடுக்க பயன்படும் கருவிகள், மிதவை மற்றும் மூழ்கும் மீன் தீவனம் தயாரித்தல், காய வைத்தல் மீன் தீவன தரக்கட்டுப்பாடு உற்பத்தி செலவின கணக்கீடு ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அனைவரும் ரூ.300 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த கல்லூரியின் வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தலாம். பயிற்சி முடிவில் பயிற்சியாளர்களின் சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் செல்போன் மூலமாக பேராசிரியர் மற்றும் தலைவர், மீன்வளர்ப்பு துறை, மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி-628 008, செல்போன் 94422 88850 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி முதல்வர் ப.அகிலன் தெரிவித்து உள்ளார்.