தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில்ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு பயிற்சி
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு பயிற்சி நடந்தது.
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மீன்வளர்ப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்ட நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி நடந்தது. பேராசிரியர் ஆதித்தன் பயிற்சி அளித்தார். பயிற்சியில் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டன. பயிற்சியாளர்களுக்கு ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு குறித்த காணொளி காட்சி மற்றும் செயல் விளக்க நிகழ்ச்சியும் நடந்தது. பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டனர்.
பயிற்சி நிறைவு விழாவுக்கு மீன்வளக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) .சாந்தகுமார் தலைமை தாங்கி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது, பொருளாதாரத்தில் நலிந்த மீனவ சமுதாயத்துக்கு இது போன்ற மாற்றுத் தொழில்கள் மூலம் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் என்று கூறினார். விழாவில் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.