தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் அலங்கார மீன்வளர்ப்பு பயிற்சி
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் அலங்கார மீன்வளர்ப்பு பயிற்சி வருகிற 15-ந் தேதி நடக்கிறது
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அலங்கார மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி வருகிற 15, 16-ந் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த பயிற்சியில் முக்கிய அலங்கார மீன்கள், இனப்பெருக்கம், நீர்தர பராமரிப்பு, உயிர் உணவு மற்றும் உலர் உணவு மேலாண்மை முறைகள், நோய் மேலாண்மை முறைகள், பொருளாதாரம் ஆகி தலைப்புகளில் தொழில்நுட்ப வகுப்பு பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ரூ.500 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியாளர்கள் நேரடியாகவோ அல்லது கல்லூரி வங்கி கணக்கு மூலமாகவோ கட்டணத்தை செலுத்தலாம். பயிற்சி முடிவில் சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ளும் தொழில் முனைவோர்கள் வருகிற 14-ந் தேதி மாலை 5 மணிக்குள் மீன்வளக்கல்லூரி மீன்வளர்ப்புத்துறை உதவி பேராசிரியர் ஜூடித் பெட்சியை 80722 08079, 96002 05124 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த தகவலை கல்லூரி முதல்வர் அகிலன் தெரிவித்து உள்ளார்.