தூத்துக்குடி துறைமுகத்தில் வ.உசி. பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


தூத்துக்குடி துறைமுகத்தில் வ.உசி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தில் வ.உ.சி. பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தலைமை தாங்கி வ.உ.சி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். செயலாளர் கிரிராஜ் ரத்தோடு வரவேற்று பேசினார். வ.உ.சி. துறைமுக ஆணைய துணைத்தலைவர் பிமல்குமார் ஜா, வ.உ.சி. கல்லூரி உதவி பேராசிரியர் ஜாக்சன் ஆகியோர் பேசினர். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் பேசும் போது, வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை வருங்கால சந்ததியினர் அறிநது கொள்ள வேண்டும் என்பதற்காக துறைமுக வளாகத்தில் உள்ள தகவல் நிலையத்தில், அவரது வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு ள்ளன. மேலும் துறைமுக வளாகத்தில் அமைய உள்ள கடற்சார் பாரம்பரிய அருங்காட்சியகத்துக்கு வ.உ.சி. அருங்காட்சியகம் என்று பெயரிடப்படும் என்று கூறினார்.

விழாவில் துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். வ.உ.சி. துறைமுக ஆணைய தலைமை பொறியாளர் ரவிக்குமார் நன்றி கூறினார்.


Next Story