தூத்துக்குடி உப்பு கம்பெனியில்மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
தூத்துக்குடி உப்பு கம்பெனியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி செல்சினி காலனியை சேர்ந்தவர் ஜெயமுருகன். இவருடைய மகன் இசக்கிஅர்ஜூன் (வயது 20). இவர் தாளமுத்துநகர் பகுதியில் உள்ள தனியார் உப்பு கம்பெனியில் உப்பு சாக்கு தைக்கும் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு சாக்கு தைக்கும் எந்திரத்தில் சாக்கு தைத்துக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த இசக்கி அர்ஜூன் அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story