தூத்துக்குடியில் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது


தூத்துக்குடியில்  மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது

தூத்துக்குடி

தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினாலும், வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழல் உருவாகியுள்ளது.

கோடை வெயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை வெயில் கடந்த ஒரு மாதமாக மக்களை கடுமையாக வாட்டியது. கத்திரி வெயில் காலம் முடிந்த பிறகும், வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்தது. அதன்படி சுட்டெரிக்கும் வெயில் நேற்றும் தொடர்ந்தது. அதே நேரத்தில் அரபிக்கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக பருவமழை பெய்வதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் கருதப்படுகிறது. இதனால் பருவமழை பெய்யுமா என்று மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

பலத்த காற்று

இந்த நிலையில் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது லேசான காற்று வீசத் தொடங்கியது. நேற்று காலை முதல் பலத்த காற்று வீசத் தொடங்கியது. இதனால் ரோட்டில் புழுதியை வாரி இறைத்தது. சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். நேற்று மணிக்கு சுமார் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. காற்று வீசத் தொடங்கி இருப்பதால், பருவமழை பெய்யத் தொடங்கி விடும் என்று மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story