உடன்குடி தேரியூரில்இந்து சமய பண்பாடு வகுப்பு நிறைவு விழா
உடன்குடி தேரியூரில் இந்து சமய பண்பாடு வகுப்பு நிறைவு விழா
உடன்குடி:
உடன்குடிதேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலை பள்ளியில் இந்துசமய பண்பாட்டு வகுப்பு நிறைவு, மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது,
சேவாபாரதி அமைப்பின் சார்பில் உ.டன்குடி ஓன்றியத்தில் 100மேற்பட்ட கிராமங்களில் கோடைகால இந்துசமய பண்பாட்டு வகுப்புகள் கடந்த மே.1-ந்தேதி தொடங்கி 15 நாட்கள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள், பயிற்சியளித்த ஆசிரியர்கள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்னாள் மேலாளர் சாத்தாக்குட்டி தலைமை தாங்கினார். ஆசிரியர் பத்மநாபன், உடன்குடி ஒன்றிய பா.ஜ.க. மகளிரணி தலைவி தமிழ்செல்வி, பா.ஜ.க.தலைவர் ஆழகேசன், யூனியன் துணைத்தலைவி சாந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேவாபாரதி மாவட்ட தலைவர் கிருஷ்ணமந்திரம் வரவேற்றார். இந்து ஒற்றுமை, பாரத நாட்டின் பழம்பெரும் கலாசாரம், இந்து சமயத்தின் அறிவியல் உண்மைகள் குறித்து திருச்சி தர்மபிரசாரக் வீரராகவன் பேசினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலர் ரா.சிவமுருகன் ஆதித்தன் பரிசுகளை வழங்கி பல்வேறு இந்து சுவாமி வேடங்கள் அணிந்து வந்த சிறுவர்களை பாராட்டினார். இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் சுடலைமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரப்பாண்டி உட்பட திரளான சங்கப் பாரிவார் அமைப்பினர்கள் கலந்துகொண்டனர்.