உடன்குடி அரபிக் கல்லூரியில்இஸ்லாமிய வரலாற்று கண்காட்சி
உடன்குடி அரபிக் கல்லூரியில் இஸ்லாமிய வரலாற்று கண்காட்சி நடந்தது.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி பெரியதெரு மகளிர் அரபிக் கல்லூரியில் 18-வது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு இஸ்லாமிய வரலாற்றுக் கண்காட்சி நடந்தது. இக்கண்காட்சியை த.மு.மு.க. மற்றும் ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். தொடர்ந்து கண்காட்சியில் வைக்கப்டடிருந்த இஸ்லாமிய வரலாற்று இடங்கள், ஆடம்பர திருமணம் தவிர்ப்பு, பல்வேறு மொழிகளில் வைக்கப்பட்டிருந்த திருக்குர்ரான் புத்தகங்கள், இஸ்லாம் உலகிற்கு வழங்கிய அருட்கொடைகள் குறித்த விபரங்கள் ஆகியவற்றை மாணவிகளிடம் அவர் கேட்டறிந்தார். இதில் மகளிர் அரபுக் கல்லூரி நிறுவனர் அபு உபைதா, முதல்வர் ஜஹ்பர் சாதிக், த.மு.மு.க. மாவட்ட தலைவர் ஆசாத், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் மகபூப், ம.ம.க. மாநில செயலர் ஜோசப் நொலாஸ்கோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story