உடன்குடி வாரச்சந்தையில் காய்கறிகள் விலை 'கிடுகிடு' உயர்வு


உடன்குடி வாரச்சந்தையில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 11 July 2023 12:15 AM IST (Updated: 11 July 2023 2:32 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடி வாரச்சந்தையில் காய்கறிகள் விலை 'கிடுகிடு' உயர்த்தி விற்கப்பட்டன. மீன்கள் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி வார சந்தையில் நேற்று காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்த்தி விற்கப்பட்டன. ஒருகிலோ சின்னவெங்காயம் ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வாரச்சந்தை

உடன்குடியில் நேற்று வாரச்சந்தை கூடியது. சுற்றுப்புறங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டகிராம மக்கள் இந்த வாரச்சந்தையில் குவிந்து காய்கறிகள் உள்ளிட்ட வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வர். பொதுவாக இந்த வார சந்தையில் காய்கறிகள், மீன்கள், ஆடு. கோழிகள், ஜவுளி பாத்திரங்கள் உட்பட அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கும். இதனால் வாரச்சந்தைக்கு பல ஆயிரம் மக்கள் குவிந்து ஒருவாரத்துக்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி ெசல்வர்.

சின்னவெங்காயம் ரூ.180

ஆனாள், நேற்று கூடிய வார சந்தையில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்த்தி விற்கப்பட்டது. சந்தையிலுள்ள கடைகளில் காய்கறிகளும் குறைந்த அளவிலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்கப்பட்டது. இதேபோன்று மிளகாய், பீன்சும் கிலோவுக்கு ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், கிலோவுக்கு இஞ்சி ரூ.300, சின்ன வெங்காயம் ரூ.180, வெள்ளைப்பூண்டு ரூ.180, கத்தரிக்காய் பாகற்காய் கேரட், அவரை ஆகியவை ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்து. இதேபோன்று மற்ற காய்களின் விலையும் உயர்த்தி விற்கப்பட்டது.

மீன்கள் விலை உயர்வு

காய்கறிகளுக்கு இணையாக மீன்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது ஒரு கிலோவுக்கு வாவல் ரூ 1,000-ம், பிள்ளைசுறா ரூ.950-ம், சீலா ரூ.900-ம், குதிப்பு ரூ.650-ம், மாவுலா ரூ.500-ம், பாறை ரூ.350-ம் விற்கப்பட்டது. அதேசமயம், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவில் விரும்பி வாங்கும் வாளைமீன், சாலைமீன், இறால் மீன் போன்றவை விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் வாரந்தோறும் கூட்டம் அலைமோதும் மீன்கடைகளிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே ஆட்கள் காணப்பட்டனர்.

காய்கறிகளும், அவற்றுக்கு இணையாக மீன்களும் விலை உயர்த்தி விற்கப்பட்டதால், பெரும்பாலான மக்கள் வழக்கத்திற்கு மாறாக பாதிக்கு பாதி குறைந்த அளவே வாங்கி சென்றனர்.


Next Story